ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். டி.டி.வி.தினகரனும் தேர்தலில் போட்டியிட உள்ளார். அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தண்டையார்பேட்டையிலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனுத்தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசிநாள். வேட்புமனு தாக்கலுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனுத்தாக்கல் செய்ய வருவோர், கார்களில் அணிவகுத்து வரக்கூடாது. 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!