வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (27/11/2017)

கடைசி தொடர்பு:12:36 (27/11/2017)

மணவிழாவில் நாட்டு மாடுகள் கண்காட்சி! - அசத்திய நாமக்கல் இளைஞர்

நாமக்கல்லில் மணவிழாவின்போது, நாட்டு மாடுகள்குறித்த விழிப்பு உணர்வு கண்காட்சி நடத்தி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். 

நாட்டு மாடுகள் கண்காட்சி நடத்திய இளைஞர்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின், தமிழகம் முழுவதும் நாட்டு மாடுகளை காப்பதுகுறித்து விழிப்பு உணர்வு பரவலாக உருவாகியுள்ளது. திருச்சி மாநகர கமிஷனராக இருந்த அருண் ஐ.பி.எஸ் கூட, நாட்டு மாடு ஒன்றை வளர்த்துவருகிறார். சமீபத்தில், அருண் வளர்த்த காங்கயம் பசு குட்டி ஈன்றது. பசுவுடன் குட்டி இருப்பது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். 

அதேப்போலவே, நாமக்கல் அருகேயுள்ள சேந்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் மனோஜ்குமார் தன் திருமணத்தின்போது, நாட்டு மாடுகளை காப்பதுகுறித்து விழிப்புஉணர்வு கண்காட்சி நடத்தி அசத்தியுள்ளார். வழக்கமாக திருமண விழாக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விருந்து என முடிவடைந்துவிடும். மனோஜ்குமாரின் திருமணத்தின்போது, திருமண அரங்கின் அருகே அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் ஏராளமான நாட்டு மாடுகள் அலங்கரித்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. திருமணத்துக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியதோடு  நாட்டு மாடுகளையும் பார்வையிட்டுச் சென்றனர். நாட்டுமாடுகள்குறித்து அவர்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டன.  

திருமணத்தில் நாட்டு மாடுகள்

இதுகுறித்து மனோஜ்குமார் கூறுகையில், '' தமிழ்நாட்டில் 170 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. அதில், பெரும்பாலானவை அழிந்து விட்டன. நாட்டு மாடுகள் காப்பதன் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக திருமணத்தின்போது நாட்டு மாடுகள் கண்காட்சி நடத்தினேன்'' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க