வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (27/11/2017)

கடைசி தொடர்பு:14:22 (27/11/2017)

ரகுவைக் கொன்றது யார்? வாசகத்தை அழித்தது யார்?

கோவையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவு மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், ரகுவைக் கொன்றது யார் என்று சாலையில் எழுதப்பட்டிருந்த வாசகம் அழிக்கப்பட்டுள்ளது.

ரகுவைக் கொன்றது யார்

கோவையில், வரும் டிசம்பர் 3-ம் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோவை முழுவதுமே அ.தி.மு.க சார்பில் பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரிஅருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மீது, கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் ரகுபதி என்ற இளைஞர் மோதி கீழே விழுந்தார். அவர் எழுவதற்குள், அந்த வழியே வந்த லாரி மோதியதில், ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், கோவையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக்கிற்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதனிடையே, ரகுபதி உயிரிழந்த இடத்தில், Who Killed Ragu (ரகுவைக் கொன்றது யார்) என்று, நேற்று முன்தினம் இரவு பெயின்ட்டில் எழுதப்பட்டிருந்தது.

ரகுவைக் கொன்றது யார்

இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும், #WhoKilledRagu என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு, அந்த வாசகம் அழிக்கப்பட்டுள்ளது. தார் மூலம் அந்த வாசகத்தை அழித்துள்ளனர். அதன் மேலேயே மண் அள்ளிப்போட்டுள்ளனர். இந்த விஷயம் பெரிதாகப் பேசப்பட்டுவருவதால், அ.தி.மு.க-வினரே இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ragu