வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (27/11/2017)

கடைசி தொடர்பு:17:26 (27/11/2017)

பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் ஜனவரியில் ரிலீஸ்!

தெலுங்கில் சூப்பர் ஹீரோவான பவன் கல்யாண் நடித்திருக்கும் திரைப்படம் 'அக்னதாவாசி'. பவன் கல்யாணின் 25 வது படமான இதற்கு தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தைத் திருவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கியிருக்கிறார். 

பவன் கல்யாண்

பவன் கல்யாண் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகும் வேளையில் இந்தப் படம் அடுத்தவருடம் ஜனவரிக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏற்கெனவே இரண்டு தெலுங்கு திரைப்படம் வெளிவந்திருந்தாலும், இது அவரே டப்பிங் பேசும் முதல் படமாகும். அனிருத் இசையமைக்கும் முதல் தெலுங்கு படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க