உயிருக்குப் போராடிய நாயை மீட்ட போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்!

ன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் அராஜகத்தால், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ராஜேஷ் என்பவரின் மண்டை உடைந்தது. இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்த ராஜேஷை ஹெல்மட் அணியவில்லை என்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் லத்தியால் தலையில் ஓங்கி அடித்தார். நல்லவேளையாக ராஜேஷ் வண்டியைக் கட்டுப்படுத்தி நிறுத்தினார். கீழே விழுந்திருந்தால் உயிருக்குகூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். போலீஸ் அடித்ததால் ராஜேஷின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. 

இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அந்த சப்-இன்ஸ்பெக்டரைச் சரமாரியாகத் தாக்கினர். போலீஸுக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுல்லு ஏற்பட்டது. பொது மக்களிடம் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை மீட்ட மற்ற போலீஸார் அவரைப் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். இளைஞரை போலீஸ் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தின. கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் எம்.துரை, ராஜேஷைத் தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மரிய அக்ரோஸ் என்பவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் போலீஸ் இப்படி, அராஜகத்துடன் நடந்துகொண்டிருக்க பெங்களூருவில் 15 போலீஸார் சேர்ந்து நாயை உயிருடன் மீட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடத்துக்குள் தலையை விட்டுவிட்டு தவித்துக்கொண்டிருந்த தெருநாயைப் பிடித்த போலீஸார், குடத்தை வெட்டி அதைக் காப்பாற்றினர். பெங்களூரு நகரப் போக்குவரத்து இணை கமிஷனர் அபிஷேக் கோயல், நாயைப் போலீஸார் மீட்பது போன்ற புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். ஆயிரக்கணக்கானோர், நாயை மீட்ட போலீஸாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!