வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (28/11/2017)

கடைசி தொடர்பு:08:46 (28/11/2017)

சென்னையில் மழைக்கு வாய்ப்பு! அடுத்த காற்றழுத்தத் தாழ்வுநிலை ரெடி

'கடலோரத் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், இன்னும் மூன்று தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது' என்று சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் ஸ்டெல்லா அறிவித்துள்ளார்.

மழை

 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ''தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை சற்று பலவீனம் அடைந்து அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியிலும் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருக்கிறது. 

அதனால், பாண்டிச்சேரி மற்றும் கடலோர தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழை வரை பெய்வதற்கான  வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வின் நகர்வைப் பொறுத்து மழையின் தாக்கத்தில் மாறுதல் இருக்கும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க