வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (28/11/2017)

கடைசி தொடர்பு:12:33 (28/11/2017)

கழிவறைகளைப் பூட்டிய போலீஸ்! - போராட்டத்தின்போது அவதிக்குள்ளான செவிலியர்கள்!

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

செவிலியர்கள்
 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கினர். மாநில சுகாதாரத் துறை கடந்த 2012ம் ஆண்டு போட்டித் தேர்வு வாயிலாக 11,000 செவிலியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்தியது. இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்துவிடுவதாக அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாத சம்பளமாக 7000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை. இதனால் போராட்டத்தில் குதித்த செவிலியர்கள்,  ’ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. எங்களது உரிமைகளுக்காகப் போராடுகிறோம். அறவழியில் போராடி, எங்களது உரிமைகளை மீட்போம்' என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கழிவறைகளை நேற்றிரவு பூட்டியதால், செவிலியர்கள் அவதிக்குள்ளாகினர்.  ஆனாலும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க