ஐ.டி வளையத்தில் சத்யம் சினிமாஸ்! - பின்னணி என்ன?

சென்னையில், சத்யம் சினிமாஸுக்குச் சொந்தமான இடங்களில், இன்று காலை முதல் வருமான வரிச் சோதனை நடந்துவருகிறது. 

sathyam
 

முதற்கட்டமாக,  பெரம்பூரில் உள்ள எஸ் 2 சத்யம் சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சத்யம் சினிமாஸ் தொடர்பான இடங்கள் உட்பட சென்னை முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறை சோதனை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த சோதனையின்  தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். 

ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!
வேளச்சேரி, ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் செயல்பட்டுவரும், லூக்ஸ் மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்கு, சத்யம் சினிமாஸுக்குச் சொந்தமானதாகும். இளவரசியின் பெயரில் இருந்ததாகக் கூறப்படும் நிறுவனம் ஒன்று, கடந்த 2015ல் சத்யம் சினிமாஸிடமிருந்து லுாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கை வாங்கி ’ஜாஸ் சினிமாஸ்’ என்று பெயர் மாற்றியது.  தற்போது, இளவரசியின் மகன் விவேக், ஜாஸ் சினிமாஸை நிர்வகித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யம் உரிமையாளர்களை மிரட்டி, சசிகலா உறவினர்கள் லுாக்ஸை சொந்தமாக்கிக் கொண்டதாக முன்னர் சர்ச்சை கிளம்பியது.

இப்படியிருக்க, சத்யம் சினிமாஸுக்குச் சொந்தமான இடங்களை வருமான வரித்துறை சுற்றிவளைத்து சோதனையைத் தொடங்கியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!