வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (28/11/2017)

கடைசி தொடர்பு:11:45 (28/11/2017)

ஐ.ஐ.டி-யைப் புறக்கணித்து ராணுவ அகாடமியில் இணைந்த இளைஞர்!

ன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதே இலக்காக இருக்கும். உத்தரகாண்ட்டைச் சேர்ந்த ஷிவனேஷ், சற்று விச்தியாசமான இளைஞர். காஷீபூரில் உள்ள பள்ளியில் படித்த ஷிவனேஷ் 12-ம் வகுப்பில் 96.8 சதவிகித மதிப்பெண் பெற்றுத் தேறினார். ஐ.ஐ.டி-யில் சேர  JEE நுழைவுத் தேர்வும் எழுதி வெற்றிபெற்றிருந்தார். 

shivnesh

ஷிவானேசுக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்பதே லட்சியம். அதனால், யு.பி.எஸ்.சி நடத்தும் டிஃபென்ஸ் அகாடமி நுழைவுத் தேர்வும் எழுதியிருந்தார். 25ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படனன. 370 பேர் எழுதிய இந்தத் தேர்வில் ஷிவானேஷ் முதலிடம் பிடித்தார்.

இது குறித்து ஷிவானேஷ் கூறுகையில், '' எனக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும். படிப்பையும் விளையாட்டையும் சமமாக பாவித்து  திட்டமிட்டு படித்தேன். நாட்டுக்காக என் வாழ்வை அர்ப்பணிப்பதுதான் என் நோக்கம். அது இப்போது நிறைவேறியிருக்கிறது '' என்றார். 

ஷிவனேஷின் தந்தை சஞ்சீவ் ஜோஷி, எல்.ஐ.சி-யில் பணிபுரிகிறார். தாயார் ஆசிரியை, டிஃபென்ஸ் அகாடமி நுழைவுத் தேர்வில் உத்தரகாண்ட்டைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை. 

புனேயில் உள்ள டிஃபென்ஸ் அகாடமி, முப்படைகளுக்குமான கல்வி மற்றும் பயிற்சி மையம் ஆகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க