ஆர்.கே.நகரில் இவர்கள்தான் வெற்றிபெறுவார்கள்! சிங்கப்பூர் புறப்படும் முன் விஜயகாந்த் பேட்டி

மருத்துவ சிகிச்சைக்காக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், இன்று விமானம்மூலம் சிங்கப்பூர் புறப்பட்டார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று வந்தார். ஆனால், பேசுவதில் விஜயகாந்த்துக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்திடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.  அதற்குப் பதில் அளித்த விஜயகாந்த், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம். நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றார்.''

இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு, ''ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். முறைகேட்டைத் தடுக்க, மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். ஆர்.கே.நகரில் விதிக்கப்பட்ட பிரசார கட்டுப்பாடுகளைப் பணப்பட்டுவாடா செய்பவர்களே விமர்சிப்பார்கள்'' என்று கூறினார்.

தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறதே என்ற கேள்விக்கு, ''மாணவ- மாணவிகளின் தற்கொலை அதிகரித்திருப்பது ஆட்சியின் அவலநிலையைக் காட்டுகிறது'' என்று குற்றம் சாட்டினார் விஜயகாந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!