வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (28/11/2017)

கடைசி தொடர்பு:13:03 (28/11/2017)

ஹதியாவுக்கு பாதுகாப்பளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படும் கேரள மாணவி ஹதியா என்ற அகிலா சேலத்தில் படிப்பைத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தில் படிப்பை முடிக்கும் வரையில், தமிழக அரசு அவருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கேரள மாணவி ஹைதியா

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் டி.வி.புரம் பகுதியைச் சேர்ந்தவர், அசோகன். இவரின் மகள் அகிலாவை ஷபின் ஜகான் என்பவர் ஹதியா எனப் பெயரிட்டு, இஸ்லாம் மதத்துக்கு மாற்றித் திருமணம் செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது. இந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமணத்தை ரத்துசெய்தது. இதை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, ஹதியாவின் கருத்தைக் கேட்க வேண்டும். எனவே, அவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட ஹதியா நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன் ஆஜரானார். நீதிபதிகளிடம் பெற்றோருடன் வாழ விருப்பமில்லை என்று ஹைதியா கூறியுள்ளார். மேலும், படிப்பைத் தொடர விரும்புவதாகவும் தன் கணவர் செலவிலேயே படிக்க விரும்புவதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். 

சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில்தான் நர்சிங் படித்துவந்தார் ஹதியா. அந்தக் கல்லூரி டீனை உச்ச நீதிமன்றம் ஹதியாவுக்கு கார்டியனாக நியமித்துள்ளது. சேலத்தில் படிக்கும்போது அவருக்கு தமிழக அரசு பாதுகாப்பளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சேலத்தில் யாராவது கார்டியனாக வேண்டுமா என ஹதியாவிடம் கேட்டபோது, 'தன் கணவர்தான் எனக்கு கார்டியனாக இருக்க முடியும்' என்று  தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க