``மனைவி சொத்து அல்ல; கணவரை கார்டியனாக நியமிக்க முடியாது!'' - ஹதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

னைவி என்பவர் சொத்து அல்ல, எனவே கணவரை கார்டியனாக நியமிக்க முடியாது என ஹதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதம் மாறிய அகிலா என்ற ஹைதியா

கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்ணான அகிலா, மதம் மாறி ஷபின் ஜகான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பெயரை ஹதியாஎன்றும் மாற்றிக் கொண்டார். 'லவ்ஜிகாத்' என்று சொல்லப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஹைதியாவிடம் நேரடியாக விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அமர்வில் இடம் பெற்றிருந்தனர். 

உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான 25 வயது ஹதியாவிடம் அரை மணி நேரம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஹதியாவின் சிறு வயது வாழ்க்கை படிப்பு, லட்சியம், பொழுதுபோக்குகள் குறித்து கேட்டறிந்தனர். '' இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் தழுவினேன். நான் என்ன செய்கிறேன்  என்று புரிந்துகொண்டிருக்கிறேன். என் கணவருடன் சுதந்திரமாக வாழவே விரும்புகிறேன்'' என ஹைதியா பதிலளித்தார். 

கல்வியைத் தொடர விரும்புவதாக நீதிபதிகளிடம் ஹைதியா கூறியதையடுத்து, படிப்பை தொடர நீதிபதிகபள் அனுமதித்தனர். சேலத்தில் படிக்கும்போது, 'அருகில் உள்ள உறவினர்கள் யாரையாவது கார்டியனாக நியமிக்கலாமா என ஹைதியாவிடம் கேட்ட போது,' தன் கணவரைத் தவிர யாரும் தனக்கு கார்டியனாக இருக்க முடியாது' என அவர் பதிலளித்தார். 

அப்போது. நீதிபதி சந்நிரசூட் ஹதியாவிடம் ''மனைவி என்பவர் கணவரின் சொத்து அல்ல. எனவே. அவரை கார்டியனாக நியமிக்க முடியாது. மனைவிக்கு என்று தனி அடையாளங்களும் சமூக அந்தஸ்த்தும் உண்டு. நான்கூட என் மனைவிக்கு கார்டியனாக இருக்க முடியாது. நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்'' என அறிவுரை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து,  சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியின் டீன் ஹதியாவுக்கு கார்டியனாக நியமிக்கப்பட்டார். ஹைதியா படிப்பைத் தொடருவதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!