மதுரையில் போலி குழந்தைகள் காப்பகத்துக்கு சீல்! 

 

குழந்தைகள் காப்பகம்

 

மதுரை மாவட்டம் அழகர்கோயில் செல்லும் சாலையிலுள்ள கடச்சனேந்தல் கிராமத்தில், ஒத்தக்கடை செல்லும் சாலையில், தனியார் கட்டடத்தில் போலியான 'குழந்தைகள் காப்பகம்' செயல்பட்டுவந்தது. இந்தக் காப்பகத்தில், அரசு காப்பக விதிமுறைகளுக்குப் புறம்பாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார். சட்டத்துக்குப் புறம்பாக இந்தக் காப்பகத்தை நடத்திவந்த பாண்டிசெல்வி என்ற பெண் கைதுசெய்யப்பட்டு காவல்துறை விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விவிலிய ராஜா, டி.எஸ்.பி வனிதா மற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, போலியான காப்பகத்துக்கு சீல் வைத்தனர். ஏற்கெனவே, இப்பகுதியில் போலியான காப்பம் ஒன்று இருந்து சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு போலி காப்பகம் உருவானது முகம்சுழிக்கவைப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!