டெங்கு காய்ச்சலுக்கு 8 மாத பெண் குழந்தை பலி!

Thoothukudi medical college hospital

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த 8 மாத பெண் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியிலுள்ள 40 வீட்டுக் காலனியைச் சேர்ந்தவர், கனகராஜ். இவரது மனைவி சபர்னா. இவர்களது 8 மாத பெண் குழந்தை சான்ட்ரியாவுக்கு, கடந்த 2 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து, தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தும் காய்ச்சல் குறையாமல் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படிருப்பது தெரியவந்தது. டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. டெங்குவின் தாக்குதலில் 8 மாதக் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!