மதுரை மாலில் ஐ.டி அதிரடி ரெய்டு! மன்னார்குடி ஒப்பந்தம் காரணமா?

மன்னார்குடி குடும்பத்தினர் என்றழைக்கப்படும் சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, விவேக் ஜெயராமன் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் மெகா சோதனையை நடத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கான ஆவணங்களைக் கைப்பற்றி விசாரித்துவருகிறார்கள். இதில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லமும் தப்பவில்லை. இந்த நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின், இன்று மீண்டும் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்திவருகிறது வருமான வரித்துறை.

மதுரையில்

மதுரை அண்ணாநகரில் அமைந்திருக்கும் மில்லனியம் என்ற மாலில், வருமான வரித்துறையினர் இன்று காலையிலிருந்து சோதனை நடத்திவருகிறார்கள். ஏன் இந்தச் சோதனை என்று விசாரித்தபோது, ஜவுளித்தொழில் செய்துவரும் இந்த மாலின் உரிமையாளர், அதை விற்பனை செய்யும் முடிவில் இருந்திருக்கிறார். அப்போது, மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விலை பேசியதாகவும், அது சம்பந்தமாக ஒப்பந்தம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்த ஒப்பந்த விவரத்தை அறிந்துகொண்டே இந்தச் சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!