நீர் நிலைகளைப் பாதுகாக்க 800 மரக் கன்றுகள்! மதுரை எஸ்.பி அசத்தல்

sp

மதுரை ஆயுதப்படை மைதானத்தின் காவலர் குடியிருப்பு வளாகத்தில், நீண்ட நாள்களாகப் பராமரிக்கப்படாமல் இருந்த குளத்தைத் தூர் வாரும் பணியில் ஆயுதப்படை காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர் . தூா் வாரும் பணிகள் நடைபெற்ற கரை ஓரங்களில், சுமார் 400 பனை மரக் கன்றுகள் மற்றும் 400 இதர மரக்கன்றுகளை  நடும் பணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆயுதப்படை டி.எஸ்.பி-கள் முருகன், ராஜ் மோகன், காமராஜ் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்றனர்.

நீர் நிலைகளைப் பாதுகாக்கும் பாெருட்டு, 20 லட்சம் மதிப்பிலான பணிகளைத் தன்னார்வத்தோடு காவல்துறையிர் மேற்கொள்வது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ''தற்போது மதுரை பகுதியில் மழை பொழிந்துவருகிறது. இந்தச் சமயத்தில் பனைமரங்கள் நடுவது, குளங்களைத் தூர் வாருவது, பிளாஸ்டிக் பைகளைக் கட்டுப்படுத்துவது அவசியமானவை. இளைஞர்களும் சமூக அமைப்புகளும் இதுபோன்ற பணிகளைச் செய்துவரும்போது, காவல்துறையும் கைகோத்து இவ்வாறான பணிகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது'' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!