வீட்டின் மாடியில் தீக்குளித்த ஏழாம் வகுப்பு மாணவன்! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் காமேஷ் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் காமேஷ் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வருகிறான். இன்று காலை 9 மணிக்கு வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரின் பெற்றோர்களும் வீட்டில் இருந்தனர். மாடிக்குச் சென்ற காமேஷ், திடீரென மண்ணெண்ணையை உடல் முழுக்க ஊற்றிக்கொண்டு தீயைப் பற்றவைத்துக்கொண்டார். காமேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாகத் தீயை அணைத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு காமேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 50 சதவிகித தீக்காயங்களுடன் காமேஷ், சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காமேஷ் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!