வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (28/11/2017)

கடைசி தொடர்பு:21:30 (28/11/2017)

காவு வாங்கிய கள்ளக்காதல்! சீர்காழி அதிர்ச்சி

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அகணி கிராமத்தில் இளைஞர் ஒருவர் இன்று வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீர்காழி அருகே கீழஅகணி கிராமம் தோப்புத் தெருவில் வசிக்கும் கார்த்திகேயன் மகன் கலையரசன் (வயது 35) விவசாயக் கூலிவேலை செய்துவந்தார். இவர், கவிதா என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்தார். இந்தத் தம்பதிகளுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகளும், நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். நல்லபடியாய் வாழ்க்கைப் போய்க்கொண்டிருந்த நிலையில், எதிர்வீட்டில் வசிக்கும் டிரைவரான கண்ணனுக்கும், கவிதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் இந்த விஷயம் கலையரசனுக்குத் தெரியவரவே கவிதாவைக் கண்டித்தார். கணவனுக்குத் தெரிந்துவிட்ட நிலையில், இனி கண்ணனுடன் பழகமுடியாது என்று எண்ணிய கவிதா, ஓராண்டுக்குமுன் கண்ணனோடு சென்னைக்குச் சென்று கணவன், மனைவியாய் வாழ்ந்துவந்தார். அவமானம் தாங்காத கலையரசன், அவர்கள் மீது தீராத கோபத்துடன் இருந்து வந்தார்.  

இந்நிலையில், இன்று (28.11.2017) கண்ணன் மட்டும் அகணிக் கிராமத்துக்கு வரவே, ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த கலையரசனும் அவரின் தந்தை கார்த்திகேயனும் கண்ணனைத் தாக்கிக் கழுத்தில் வெட்டினர். சம்பவ இடத்திலேயே கண்ணன் பலியானார். கலையரசன் தலைமறைவாகிட, கார்த்திகேயனைக் கைதுசெய்துள்ள போலீஸார் கொலை வழக்குப்பதிவுசெய்து கலையரசனைத் தேடிவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க