`கட்சிக்குள் சலசலப்பு பெரிய விஷயமல்ல' - கலகலத்த அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் தன்னுடைய மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் சாலை மற்றும் குடிநீர் பணிகளை இன்று பார்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஆட்சிமன்றக் குழு கூடி ஆர்.கே.நகர் வேட்பாளரை நாளை அறிவிக்கும், அ.தி.மு.க அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

அதிமுக கொடியை

ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தில் சிறிய சலசலப்புகள் வரும். அது பெரிய விஷயமல்ல. ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்தும் சரியாகிவிடும். சட்டப்படி தேர்தல் ஆணையத்தால் அ.தி.மு.க அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, அ.தி.மு.க கொடியை இன்னொருவர் பயன்படுத்தவது ஏற்புடையது அல்ல. மக்கள், தொண்டர்கள் மத்தியில் வீண்குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்கள். ஒரு கட்சிக்கு கொடி, சின்னம் ஒதுக்கப்பட்டப் பின்னர், மற்றவர்கள் பயன்படுத்துவது பற்றி எங்கள் வழக்கறிஞர் அணி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!