மேலும் இரண்டு எம்.பி-க்கள் தினகரன் அணியிலிருந்து எடப்பாடி அணிக்குத் தாவல்!

தினகரன் அணியில் இருந்த இரண்டு எம்.பி-க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவியுள்ளனர்.


 

பசுமைவழிச் சாலையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேற்று தினகரன் ஆதரவு எம்.பி-க்களான விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்த அணித்தாவல் நடவடிக்கை குறித்து தினகரன், `எடப்பாடியைச் சந்தித்த எம்.பி-க்கள் என்னிடம் கூறிவிட்டுதான் அணி மாறினார்கள்' என்று தடாலடி பதிலைக் கூறியிருந்தார். இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த திண்டுக்கல் எம்.பி உதயக்குமார் மற்றும் வேலூர் எம்.பி செங்குட்டுவன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். நேற்று மூன்று எம்.பி-க்கள் அணி தாவிய நிலையில், இன்று இரண்டு எம்.பி-க்கள் அணி தாவியுள்ளது அ.தி.மு.க வட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!