ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் போட்டாபோட்டி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க-வினர் தயாராகி விட்டார்கள். மீண்டும் மதுசூதனனே நிறுத்தப்படுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து வரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான மதுசூதனனை வேட்பாளராகக் களமிறக்குவதில், எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு இல்லை என்றும் பேசப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது இன்று வெளியான விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை. விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்கள் என்ற ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல்

அதில், எம்.கே.பி.நகர் சம்பத், கழக அவைத்தலைவர் மதுசூதனன், ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயின், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் அஞ்சலை, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் முருகன், முன்னாள் மண்டலத் தலைவர் கார்த்திகேயன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் பாலமுருகன், ஆர்.கே.நகர் பகுதிக் கழக துணைச் செயலாளர் மதுரை குமார், முன்னாள் கவுன்சிலரும், சேப்பாக்கம் தொகுதி முன்னாள் வேட்பாளருமான நூர்ஜஹான், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜேஷ், முன்னாள் வடசென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் சேவல் சுப்பிரமணி, சென்னை வடக்கு மாவட்ட மீனவர் அணி மாவட்டச் செயலாளர் கணேசன், வடசென்னை தெற்கு வட்டச் செயலாளர் நாகலிங்கம், வடசென்னை அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கச் செயலாளர் தேவராஜ், முன்னாள் பகுதி கழகத் துணைச் செயலாளர் முகமது உஸ்மான், கோயில் பிள்ளை என 18-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!