கனமழை எச்சரிக்கை: குமரி மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்!

கன்னியாகுமரி மாவட்டக் கடலோர கிராமங்களில் கனமழையும், கடலில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதனால் கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், அலைகளும் ஆக்ரோஷமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்தத் தகவலை சென்னை மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் கடலோர கிராமங்களுக்கு மீனவர் சங்கங்கள் மூலம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான அனைத்துக் கடற்கரை கிராமங்களுக்கும் தகவல் உடனடியாகச் சென்று சேர்ந்தது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு செல்லவும், எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டுமரங்களில் கடலுக்குச் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பீதியும் நிலவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!