ஓ.பி.எஸ்ஸிடம் சரண்டரான உதயகுமார்!

கடந்த 25-ம் தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்பட்ட சம்பவம் அ.தி.மு.கவுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலையில், இன்று தேனி செல்ல மதுரைக்கு விமானத்தில் வந்த ஓ.பி.எஸ்ஸை வாண்டடாக போய் வரவேற்று சரண்டரானார் ஆர்.பி.உதயகுமார். பிறகு ஒரே காரில், இருவரும் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தனர்.

ஓ.பி.எஸ்ஸிடம் சரண்டர்


கூட்டத்தில்பேசிய ஆர்.பி.உதயகுமார், "நமக்குள் எத்தனை அணிகள் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் நாம் ஒரே அணிதான் என்று இந்த கூட்டத்தின் மூலமாக காட்டியுள்ளோம். இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்தான் நம் கழகம் என இரட்டை இலையைப் பெற்றதன் மூலம் நிரூபித்துள்ளோம். ஆர்.கே நகர் வெற்றி வியூகத்தை இங்கே தொடங்கியுள்ளோம். பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தக் கூட்டம் நிரூபித்துள்ளது" என்றார்.

ஓ.பி.எஸ், "இரட்டை இலைச் சின்னத்தை பெற்றது பற்றி தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் என் சுமையெல்லாம் இறங்கிவிட்டது என்று சொன்னேன். அதையே நான் இங்கே வழிமொழிகிறேன். எடப்பாடி பழனிசாமியும் நானும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் செயல்படுவோம். அனைத்து காலகட்டத்திலும் மதுரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மாவின் தொகுதியை வெற்றித் தொகுதியாக ஆக்க வேண்டும். டிசம்பர் 5-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திரண்டு வந்து புகழ் சேர்க்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!