வெளியிடப்பட்ட நேரம்: 02:36 (29/11/2017)

கடைசி தொடர்பு:07:51 (29/11/2017)

கவர்னர் பன்வாரிலாலின் செயலாளராக ராஜகோபால் நியமனம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டு, டெல்லி பணியில் இருந்து திரும்பிய ராஜகோபால் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பன்வாரிலால் புரோகித்

தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு, பன்வாரிலால் புரோஹித் தமிழக கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். கோவையில் இவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியுடன் சென்று மாநில அரசின் திட்டப்பணிகள்குறித்து ஆய்வு செய்ததை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. திட்டங்களை நேரில் சென்று பார்த்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று விளக்கம் அளித்த அவர், நேரில் சென்று பார்த்தால்தானே உண்மை நிலவரம் தெரியும். இதுபோல தமிழ்நாடு முழுவதும் போவேன் என்றும் சொன்னார்.

இதற்கிடையில், அவர் பொறுப்பேற்ற 2 மாதங்களில் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். 28.12.15 முதல் மத்திய அரசின் உள்துறையில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் பணிபுரிந்து வந்த ஆர்.ராஜகோபால், தமிழக பணிக்கு திரும்பி உள்ளார். அவர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, கவர்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கவர்னரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டு, டிட்கோ மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜகோபால், இனி கவர்னரின் செயலாளராக பணிபுரிவார்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க