டாஸ்மாக்குக்கு எதிராக பாடைகட்டி போராடிய பொதுமக்கள்!

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று பாடைகட்டி ஊர்வலமாக  வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைவீதி வழியாக பாடையைத் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிம்போது, "உயர்நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் யாரும் பின்பற்றுவதில்லை. எங்கள் ஊரில் புதிதாக திறக்கப்பட்ட  டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிறுவியாபாரிகள், வர்த்தகர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இந்தக் கடையால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் ஒருவிதமான அச்சத்தோடுதான் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் இந்த டாஸ்மாக் கடையால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆகையால், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து பேசி டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!