வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:07:25 (29/11/2017)

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரியன் மறையும் காட்சியைக் கண்டு ரசிக்க முடியும். எனவே, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் இவற்றை பார்வையிட ஆர்வம் காட்டுவார்கள். அதன்பின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கடந்த 5 நாள்களாக கன்னியாகுமரியில் இரவில் கடும் குளிர் நிலவி வருகிறது.

 

அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைக் காண கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயத்தைக் காண முடியாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுபோல மாலையில் மழை பெய்யத் தொடங்கிவிடுவதால் சூரியன் மறையும் காட்சியைக் காண முடிவதில்லை. தொடர்ந்து ஐந்து நாள்களாக சூரிய உதயத்தையும் மறைவையும் காணமுடியாதபடி காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க