கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்

நகைச்சுவைப் புயல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று. அவரது ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.

கலைவாணர்

நகைச்சுவை நடிகர்கள், திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி, கலைவாணர். 49 ஆண்டுக்கால வாழ்க்கையில், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவைமூலம் மக்களைச் சீர்படுத்த முயன்றவர். 

நகைச்சுவை நடிகர்களுக்கென்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கிவைத்து, தன் முதல் படமான சதிலீலாவதியில் தன் காமெடி ட்ராக்கைத் தானே எழுதிக்கொண்டார் கலைவாணர். தன் படங்களின்மூலம் சீர்திருத்தக் கருத்துகளை இயல்பாக மக்களிடம் கொண்டுசேர்த்தார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்துக் குரல்கொடுத்தார். திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துகள் எதுவும் அறிவுரை போல இருக்காது என்பதுதான் கலைவாணரின் நகைச்சுவை முத்திரைக்குச் சான்று. 

கொடுத்துக்கொடுத்தே கரைந்துபோனவர் என்.எஸ்.கே. மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி  சொத்தான வெள்ளிக் கூஜாவையும் தனக்குத் திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்குத் தந்துவிட்டுதான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன், தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று. சொன்னபடியே கலைவாணர் 49-ம் வயதில் மரணமடைந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!