ஆர்.கே.நகரில் போட்டி இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

”ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை” என த.மா.கா-வின் ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

g.k.vasan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. தேர்தலில், அ.தி.மு.க சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி, கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. மற்ற கட்சிகள் வேட்பாளர் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், ’தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாது’ என அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இடைத்தேர்தலில் விலகிநிற்கப்போவதாகவும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசிநாள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!