தூத்துக்குடியில் தொடரும் டெங்கு பலி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற 6 வயது சிறுமி  மம்தா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Death of 6th age girl for dengue affected

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகிலுள்ள ஜம்புலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துராஜ். விவசாயியான இவரது மகள் மம்தா (வயது 6), இந்தக் கிராமத்திலுள்ள தனியார்  பள்ளியில் 1-ம் வகுப்பு படித்துவருகிறார். 

சிறுமி மம்தாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ,அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், காய்ச்சல் குறையாததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, டெங்கு தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி மம்தா உயிரிழந்தாள். 

நேற்று, தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தை சபர்னா உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று 6 வயது சிறுமி டெங்குவால் பலியான சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!