'ஒத்துழைக்கணும் மக்களே'- ஜீரோ சதவிகிதம் டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற கலெக்டர் சபதம்

"என்னதான் கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பில் முழுவீச்சில் களம் இறங்கினாலும் ,மக்கள் உதவினால்தான் டெங்கு இல்லாத மாவட்டமாக கரூரை மாற்ற முடியும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் கூறினார். 

கரூர் நகராட்சிக்குட்பட்ட வடிவேல்நகர், இந்திரா காலனி, காவலர் குடியிருப்புப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், டெங்கு தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், "வடிவேல்நகர், இந்திரா காலனி, காவலர் குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்துகொள்ளவும், நிலத்தடி தண்ணீர்த் தொட்டிகள், நன்னீர் சேமிப்புப் பாத்திரங்களை நன்கு சுத்தம்செய்து மூடிவைக்கவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

என்னதான் கரூர் மாவட்டத்தை ஜீரோ சதவிகிதம் அளவுக்கு டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் களம் இறங்கினாலும், மக்கள் 100 சதவிகிதம் ஒத்துழைப்பு செய்தால்தான் அது சாத்தியப்படும். நாள்தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி மற்றும் ஊராக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் அசோக்குமார், வட்டாட்சியர் அருள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!