மத்திய பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக குருமீத்சிங் பதவியேற்றார்!

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, குருமீத்சிங் இன்று பதவியேற்றார்.

புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பாட்டில் இயங்கிவருகிறது, மத்திய பல்கலைக்கழகம். இதில், துணைவேந்தராகப் பணியாற்றிய சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் மீது போலி ஆவணங்கள் சமர்ப்பித்தது, அறிவுத்திருட்டு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு, அப்பதவியிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அதன்பிறகு நிரந்தர துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றிய அனீஷா பஷீர்கான் என்பவர் துணைவேந்தராகப் (பொறுப்பு) பதவி வகித்துவந்தார்.

அவர்மீதும் பல்வேறு முறைகேட்டுப் புகார்கள் எழுந்ததையடுத்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிய குருமீத்சிங் என்பவரை புதுச்சேரி பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராக நியமித்து உத்தரவிட்டது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அதன்படி இன்று புதுச்சேரிக்கு வந்த குருமீத்சிங், துணைவேந்தராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து பேராசியர்கள், துறைத்தலைவர்கள், பல்கலை ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். துணைவேந்தர் (பொறுப்பு) பதவியை வகித்துவந்த அனீஷா பஷீர்கான், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!