வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (29/11/2017)

கடைசி தொடர்பு:13:45 (29/11/2017)

தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் சுறுசுறுப்பு! மதுரையை கலக்கும் அரசியல்

மதுரை மாவட்டத்திலுள்ள 8 தொகுதி, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை வரவேற்க பிரமாண்ட விழா நடத்துவதில்தான் குறியாக உள்ளனர். தொகுதி மேம்பாட்டுக்காக எந்த வேலையும் நடக்கவில்லை என்ற குரல்கள் எழுந்துவருகிறது.  சமீபத்தில் மேலூர் பகுதி விவசாயத்துக்குத் தண்ணீர் திறந்துவிட மக்கள் வந்தபோது, மக்களுடன் மக்களாக மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளானும் வந்து கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

மதுரை


ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றி வருகிறார்கள் தி.மு.க-வின்  இரண்டு எம்.எல்.ஏ-க்கள்.  மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிழக்கு தொகுதியிலுள்ள 11 வார்டுகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காத நிலையில், பொதுமக்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி மனுக்களை வாங்கினார் பி.மூர்த்தி. அதோடு மட்டுமல்லாமல்  ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சைவம், அசைவ அறுசுவை விருந்தளித்து அசத்தினார்.

  மதுரை

 மதுரை மத்தியதொகுதி எம்.எல்.ஏவான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய தொகுதி முழுக்க புகார் பெட்டிகளை வைத்து, அப்புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுத்துவருகிறார். கமிஷன் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத இவர் முன்மாதிரியான அரசியலை செய்துவருகிறார். சட்டமன்ற உறுப்பினர்  நிதியில் இருந்து 8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 14-வது வார்டு கோமஸ்பாளையம் வாய்க்கால் கரையில் போர்வெல் மற்றும் ஆர்.ஓ பிளான்ட் அமைக்கும் பணியையும்,15-வது வார்டு முரட்டன் பத்திரி பகுதியில் 7 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் இன்று தொடங்கிவைத்தார். 8 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் இரண்டு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பரபரப்பாக பணியாற்றிவருகிறார்கள்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க