வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (29/11/2017)

கடைசி தொடர்பு:14:15 (29/11/2017)

ஆர்.கே.நகர் தொகுதி வாகனங்களுக்கு அடையாள அட்டை!

ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் வாக்களர்களின் வாகனங்களுக்கு, நாளை அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தச் செயல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. 

தேர்தல் ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 27-ம் தேதி தொடங்கியது. தேர்தலில், அ.தி.மு.க சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி, கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. 

இதையொட்டி, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 10,200 இருசக்கர வாகனங்களுக்கும், 5,070 கார்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.