தேர்தல் ஆணையத்துக்கு `ஸ்பெஷல்' கோரிக்கை வைத்த சீமான்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனிருந்தார். 

சீமான்

வேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, `ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவைத் தேர்தல் ஆணையம் தடுக்க நினைத்தால் சுலபமாகத் தடுத்துவிடலாம். பணம் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் சிலரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தால், நிச்சயம் பணப்பட்டுவாடா சம்பவங்கள் குறையும். கடந்த இடைத்தேர்தலின்போது, 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. அதுகுறித்து, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றிவிட்டனர். பணப்பட்டுவாடாவைத் தடுக்காவிட்டால் தேர்தல் நடத்துவதே வீண். பிரசாரப் பொதுக் கூட்டங்களை மாலை 5 மணிக்கு மேல் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். எங்களுக்கு யாரையும் நாங்கள் போட்டியாகக் கருதவில்லை. எங்களுடையது தனித்துவமான அரசியல். நாங்கள் மாற்று அரசியலைப் படைக்க களத்தில் உள்ளோம்' என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!