நெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் பணிகள் தொடக்கம் | Nellaiappar temple kumbabishekam works kick starts today

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (29/11/2017)

கடைசி தொடர்பு:17:10 (29/11/2017)

நெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் பணிகள் தொடக்கம்

நெல்லையப்பர் கோயிலில் 13 வருடங்களுக்குப் பின்னர் நடைபெற உள்ள கும்பாபிஷேகம் பணிகள் கணபதி பூஜையுடன் இன்று தொடங்கின. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கும்பாபிஷேகம் பணிகள்

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது. 13 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேகம் 2018-ம் ஆண்டு நடத்துவதற்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளன. இதையொட்டி, இன்று காலை 9.05 மணிக்கு சுவாமி சந்நிதி மண்டபத்தில் மகா கணபதி பூஜை விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இன்று மாலை 5 மணிக்கு மேல் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கம் முன்பாக விக்னேஷவர பூஜை, பஞ்ச கவ்யம், முதல்கால யாகசாலை பூஜை, திரவ் யாருதி நடைபெற்றது. 30-ம் தேதி ராஜகோபுரம் விமானம் மற்றும் பரிவார சானதிகளில் 7.45 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரவ் யாருதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. 10.27 மணிக்கு சோமவார மண்டபத்தில் ராஜகோபுரம், பரிவார கோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் திருப்பணி உபயதாரர்கள், ஆன்மிகப் பெருமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் பக்த பேரவையினர், அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். 


[X] Close

[X] Close