`ஜனவரியில் ரஜினி கட்சி அறிவிக்கப்போகிறாரா?' - சகோதரர் சத்தியநாராயணராவ் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சியை அறிவிக்கிறார் என்ற கேள்விக்கு அவரின் சகோதரர் சத்யநாராயணராவ் பதில் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்த தினமான டிசம்பர் மாதம் இன்னும் பிறக்கவே இல்லை. அதற்குள் அரசியல் பரபரப்பு பரபரவென பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. 'ரஜினி அரசியல் கட்சி குறித்து ஜனவரியில் அறிவிக்கப்போகிறார்' என்று ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் மீடியாக்களிடம் செய்தி வேகவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் இந்தச் செய்தி உண்மைதானா என்று தொடர்புகொண்டு அறியாமலே, போட்டிப் போட்டுக்கொண்டு பரபரப்பாகச் செய்தியைப் பரப்பி வருகின்றன. 

இந்தச் செய்தியில் உண்மை இருக்கிறதா என அறிந்துகொள்ள ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட்டிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டோம். "நான் மீடியாக்களை சந்தித்தது உண்மை. ரஜினி குறித்து நான் சொன்னதாக அவர்கள் வெளியிடும் செய்தி பொய். ஏற்கெனவே, மே மாதத்தில் தமிழகத்தில் இருக்கின்ற ரசிகர்கள் பாதிப்பேரை சந்தித்து ரஜினி போட்டோ எடுத்துக்கொண்டார். விரைவில் மீதி இருக்கும் ரசிகர்களைச் சென்னைக்கு வரவழைத்து போட்டோ எடுக்கப்போகிறார். அதன் பிறகே, ரஜினி தனியே முடிவெடுத்து அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்" என்று நான் சொன்னேன். இந்த உண்மைச் செய்தியை  மறைத்து, சும்மா ஒண்ணுக்கு ரெண்டாய் தப்பு தப்பாய் செய்தியை ஏன்தான் வெளியிடுகிறார்கள் என்பதே தெரியவில்லை" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!