வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (29/11/2017)

கடைசி தொடர்பு:19:01 (29/11/2017)

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதல் மதகு உடைந்தது... சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எனத் தகவல்!

கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதலாவது மதகின் கதவு உடைந்தது. இதனால் அதிகளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகு உடைந்ததால், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார், தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் அணையை நேரில் வந்து பார்வையிட்டனர். நீர் அழுத்தம் காரணமாக இந்த மதகு உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு இதனால் வெள்ள அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைக்கு அணைக்குப் பக்கத்தில் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி அணை