30-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹீரோக்கள் அசத்தும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ட்ரெய்லர்

அவெஞ்சர்ஸ்

காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாவது பாகமான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தின் முதல் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது மார்வல் நிறுவனம். இந்த மூன்றாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியதற்கு மிக முக்கியமான காரணம், இது வரை நாம் பார்த்த அவெஞ்சர்ஸ் படங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹீரோக்களுடன் சேர்த்து, மார்வல் யூனிவெர்ஸின் மற்ற சூப்பர் ஹீரோக்களும் களம் இறங்கவுள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், பிளாக் விடோ, கேப்டன் அமெரிக்கா, விஷன், ஸ்கேர்லட் விட்ச், ஹாக்ஐ, டாக்டர் ஸ்ட்ரேஞ், (இன்னும் இருக்கு பாஸ்...) கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வீரர்கள், பிளாக் பேந்தர், லோகி, ஸ்பைடர்மேன் என்று அனைவரும் சேர்ந்து திரையில் தோன்றப்போகிறார்கள்.

பொதுவாக, மார்வல் படங்கள் என்றாலே நகைச்சுவைக்குக் குறைவு இருக்காது. தோர் ரக்நரோக் படத்திலேயே டாக்டர் ஸ்ட்ரேஞ் மற்றும் லோகி உடனான காட்சிகள் பெரும் கைத்தட்டலைப் பெற்றது. இந்தப் படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ், அயர்ன் மேன், ராக்கெட் மற்றும் ஸ்பைடர்மேன் இணைந்து தோன்றி தங்களுக்குள் பேசியும் கொள்வார்கள் எனும்போது கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும்.  ஆனால், இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது, படத்தில் நகைச்சுவைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும், இதுவரை கார்ட்டூனில் மட்டுமே இத்தகைய சூப்பர்ஹீரோ அணிவகுப்பைப் பார்த்த ரசிகர்கள், லைவ் ஆக்ஷனில் இவர்களின் சாகசங்களைக் காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். படம் அடுத்த வருடம் மே மாதம் 4-ம் தேதி திரைக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!