வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:07:58 (30/11/2017)

’கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்!’ - தஞ்சை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு

தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கம்ப ராமாயணத்தை இயற்றியவர் சேக்கிழார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

முதல்வர்.
 

தஞ்சாவூரில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா 33 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் பேசிய முதல்வர் தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். காவிரி மன்ற இறுதித்தீர்ப்பை கெஸட்டில் வெளியிட்டதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது. அடிப்படையில் நான் ஒரு விவசாயி, வேளாண்மைத்துறை அமைச்சர் ஒரு விவசாயி. ஆகையால், இந்த அரசு விவசாயி நலன் சார்ந்த அரசு. ஆகையால், உயிரிழந்த விவசாயிகள் 51 பேருக்கு நிதியுதவி அளித்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. இங்கு அடிப்படையில் நான், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி வைத்திலிங்கம் ஆகியோர் விவசாயிகள்தான். எங்கள் அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாகத்தான் இருக்கும். எம்.ஜி.ஆர் படித்த யானையடி அரசு நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும். எம்.ஜி.ஆர் 100 ரகம் நெல் அறிமுகப்படுத்தப்படும். மணல் விற்பனையில் முறைகேடு நடக்கவில்லை. ஆன்லைனில் மணல் விற்கப்படுகிறது’ என்றார் முதல்வர். இந்த விழாவில் தஞ்சையின் பெருமைகளைப் பட்டியலிட்டுப் பேச்சைத் தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்’ என்று பேசினார். முதலமைச்சர் பேச்சு தொடர்பாக தமிழக செய்தித் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் இது இடம்பெற்றுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க