வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (29/11/2017)

கடைசி தொடர்பு:11:42 (30/11/2017)

'கோயிலைக் கொள்ளையடிப்பவர்களைத் தாக்கத் தயார்...'! யாரை குறிப்பிடுகிறார் கமல்ஹாசன்?

கோயிலைக் கொள்ளையடிப்பவர்களைத் தாக்கத் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

கமல்ஹாசன்

 

நடிகர் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார். இதையொட்டி, தொடர்ந்து அரசியல் சம்பந்தமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை கமல் சந்தித்துப் பேசி இருந்தார். தமிழக அரசுக்கு எதிரானக் கருத்துகளை சொல்லிவருவதால், அமைச்சர்கள் அவருக்குப் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், அரசியல் கட்சியின் பெயர், கொள்கை விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று சமீபத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

கமல்ஹாசன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், “கோயிலைக் கொள்ளை அடிப்பவரைத் தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால், சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது” என்று பதிவிட்டுள்ளார்.