கருணாநிதி, ஸ்டாலினுக்கு முட்டை கதை சொன்ன முதல்வர்!

இரவு பகல் பாராமல் நாங்கள் தினம் தினம் மக்களுக்காக பணி செய்து வருவதை குறைசொல்வதே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வேலையா போச்சு என்று தஞ்சையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

முதல்வர்


விழாவில் பேசிய முதல்வர், அ.தி.மு.க அரசின் சாதனைகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர், “ஸ்டாலினுக்கு நம்முடைய ஆட்சியைப் பற்றி குறை சொல்வதே வேலையா போச்சு அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தி.மு.க ஆட்சியைவிட நாங்கள் நடத்துகின்ற ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை எந்த வேறுபாடும் இல்லாமல் நாங்கள் உழைப்பது அவர்கள் கண்களை உறுத்துகிறது, எங்களின் ஒற்றுமையையும், அம்மாவின் ஆட்சியை அழித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இனி நமக்கு எல்லாமே வெற்றிதான். நம்மை எதிர்ப்பவர்களுக்கு தோல்வியைத்தான் தழுவுவார்கள். இதைக் கூறும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது என முட்டை கதையைக் கூறி அந்த சிறுவனையும் தந்தை ஆடிய நாடகத்தைப் பற்றி சொன்னார் முதல்வர். கதையில் வரும் தந்தையும், மகனையும் யாரென்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

“மணல் விற்பதில் ஊழல் நடந்திருப்பதாக துரைமுருகன் சொல்கிறார். தி.மு.க ஆட்சியில் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது வேண்டுமானால், மணலில் ஊழல் நடந்திருக்கலாம். அ.தி.மு.க ஆட்சியில் ஆன்லைனில் மணல் விற்பனை செய்திருக்கிறோம். எந்த விதத்திலும் ஊழல் நடக்கவில்லை” என்றும் முதல்வர் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!