தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

பாம்பன் துறைமுகத்தைத் தொடர்ந்து  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

number 3 storm warning cage in thoothukudi port

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் சில நாள்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து,  தூத்துக்குடி துறைமுகத்திலும்  3-ம் எண் புயல் எச்சரிக்கைக்  கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இக்கூண்டு திடீர் காற்றுடன் மழைபொழியக்கூடிய வானிலை என்பதைக் குறிக்கிறது.

தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம்  மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியில் 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, நாகை, கடலூர், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் உருவாகும் நிலையில் உள்ள வானிலைப் பகுதியைக் குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!