இந்திய-சீன எல்லையில் குமரி ராணுவ வீரர் மரணம்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இந்திய-சீன எல்லையில் குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகிலுள்ள கல்லங்குழி பகுதியைச் சேர்ந்தவர் தாசன். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஜாண் கிறிஸ்டோபர் போலீஸில் பணியாற்றிவருகிறார். இரண்டாவது மகன் ஜஸ்டின் கிறிஸ்டோபர் இந்திய ராணுவத்தின் ஐ.டி.பி.பி படைப்பிரிவில் பணியாற்றிவந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடமாநில எல்லைப் பகுதியில் பணியாற்றினார்.

அதன்பின்னர், இமாசல பிரததேசத்தில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் பணியாற்றிவந்தார். நேற்று காலை தாசன் வீட்டை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராணுவ உயர் அதிகாரி ஒருவர், ஜஸ்டின் கிறிஸ்டோபர் குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. சீன எல்லையில் பணியாற்றிய அவர், சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது வேறு காரணங்களால் இறந்தாரா? என்பது தெரியவில்லை. 

ஜஸ்டின் கிறிஸ்டோபரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து திருவனந்தபுரம் வழியாக கல்லங்குழிக்கு கொண்டுவரப்படவுள்ளது. அதன்பின் அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது. ஜஸ்டின் கிறிஸ்டோபர் மரணத்தின் முழுமையான தகவல் தெரியாததால் அவரது குடும்பமும் பெரும் சோகத்தில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!