வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:07:30 (30/11/2017)

“நாவிகா சாகர் பரிக்கிரமா” தாரணி கப்பல் நியூசிலாந்து சென்றடைந்தது

உலகைச்சுற்றிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஐ.என்.எஸ்.வி – தாரணி கப்பல் தற்போது நியூசிலாந்து நாட்டின் லைட்டெல்டன் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது. மகளிர் மட்டும் கொண்ட குழுவுடன் உலகைச் சுற்றி வரும் முதல் இந்திய கப்பல் இதுதான். லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான இந்தக் குழுவில் லெப்டினென்ட் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி. சுவாதி மற்றும் லெப்டினென்ட்கள் எஸ்.விஜய தேவி, பி. ஐஸ்வர்யா மற்றும் பாயல் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்றனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் சென்ற செப்டம்பர் 10-ம் தேதி அன்று கொடி அசைத்து இந்தப் பயணத்தைத் தொடங்கிவைத்தார். 

தாரணி கப்பல்தாரணி

பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசியக் கொள்கைக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்தப் பயணத்துக்கு “நாவிகா சாகர் பரிக்கிரமா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பயணம் பெண்களின் சக்தியை சுட்டிக்காட்டி இந்தியப் பெண்கள் சவாலான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வல்லவர்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும். உலகச் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு இந்தக் கப்பல் 2018-ம் ஆண்டு ஏப்ரலில் கோவாவுக்குத் திரும்பும். தற்போது லைட்டெல்டன் துறைமுகத்தில் உள்ள இந்தக் கப்பல் டிசம்பர் 12-ம் தேதி அங்கிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகைச் சுற்றிவரும், இந்த 56 அடி படகுக் கப்பல் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க