அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக்கூட்டம்: முதலமைச்சர் தலைமையில் முக்கிய முடிவு

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 4-ம் தேதி முடிவடைய இருக்கிறது. ஜெயலலிதா இருந்த வரை இடைத்தேர்தல் ஆனாலும், பொதுத்தேர்தல் ஆனாலும் வேட்பாளர் பட்டியல் முதலில் வெளியாகும். காங்கிரஸ் கட்சிதான் கடைசி வரை வேட்பாளரை அறிவிக்காமல் தாமதம் செய்வார்கள். அந்த அளவுக்கு கோஷ்டிகள் இருக்கும். இப்போது அ.தி.மு.க-விலும் கோஷ்டிகள் இருப்பதால், யாருக்கு ஆர்.கே.நகர் சீட் என்று முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மதுசூதனன் சென்ற முறை புரட்சித் தலைவி அம்மா  அணியில் போட்டியிட்டார். ஈ.பி.எஸ் அணியுடன் ஒன்றிணைந்த போதிலிருந்தே, ஆர்.கே.நகருக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் மதுவுக்குத்தான் சீட் தர வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியோடு இருக்கிறார்.

இந்நிலையில் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து முடிவு செய்ய அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர்,அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார்,வேலுமணி,செல்லூர் ராஜூ ஆகியோர் வந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!