சென்னையில் காலை 11 மணி வரை கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் இன்று காலை 11 மணி வரையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

மழை

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த 48 மணி நேரத்துக்குத் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறிவருவதால் சென்னையில் காலை 11 மணி வரையில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!