கமுதி அருகே உள்ள அதானி சோலார் பவர் ஸ்டேஷனில் தீ விபத்து: 7 பேர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அதானி குழுமத்தின் சோலார் பவர் ஸ்டேஷனில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள செங்கப்படை கிராமத்தில் உலகின் மிகப் பெரிய சோலார் பவர் ஸ்டேஷன் மின் உற்பத்தி செய்துவருகிறது. அதானி கிரீன் எனர்ஜி பிரைவேட் குழுமத்துக்குச் சொந்தமான இந்த நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 25 லட்சம் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு 648 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.

கமுதி தாலுகாவில் உள்ள அதானி சோலார் பவர் ஸ்டேஷன்

இங்கு நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தின்போது தொழிற்சாலையில் பணியாற்றிய 7 ஊழியர்கள் காயமடைந்ததாகவும், இதில் அதிக காயம் அடைந்த லிங்கராஜ், வெங்கட் கென்னடி, சரவணன், தங்கநாராயணன் ஆகிய 4 ஊழியர்கள் மதுரை மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!