சிறுத்தைக்கும் காருக்கும் பந்தயம்; வெற்றியாளர் யார் தெரியுமா?

லகில் அதிவேகமான விலங்கு என்ற பெருமை சிறுத்தைக்கு உண்டு. தற்போது, 6,700 சிறுத்தைகளே உலகில் உள்ளன. ஆப்பிரிக்க காடுகளில் மட்டுமே சிறுத்தைகள் உள்ளன. மனிதர்களோடு இவை நெருங்கிப் பழகும் தன்மை  கொண்டவை. சிறுத்தைகளைக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சிறுத்தைக்கும் பார்முலா -இ காருக்குமிடையே போட்டி ஒன்றுக்கு Formula E அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

சிறுத்தைக்கும் காருக்குமிடையே போட்டி

photo courtesy: nic bothma

தென்னாப்பிரிக்காவில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. பந்தயத்தில் பங்கேற்ற எலெக்ட்ரிக் கார் (spark SRTO1E) மற்றும் சிறுத்தை இரண்டுமே 0.3 விநாடியில் 100 கி.மீ வேகத்தை எட்டுபவை. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் எரிக் வெர்னே சிறுத்தையைப் போட்டியாளராக ஏற்றுக்கொண்டு பந்தயக்களத்தில் குதித்தார். பந்தயம் ஆரம்பித்ததும் பல மீட்டர்களுக்கு சிறுத்தை முன்னணியில் வந்துகொண்டிருந்தது. மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் சிறுத்தை ஓடியது. எனினும், கடைசி விநாடியில் மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிய கார் வெற்றிபெற்றது. 

எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீட் மணிக்கு 225 கி.மீ. சிறுத்தையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 112 கி.மீ. காலநிலை மாற்றத்தால் சிறுத்தை இனம் அழிந்துவருவதால், அவற்றைக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதன் வழியாக, மக்களிடையே காலநிலை மாற்றம்குறித்து விழிப்பு உணர்வு ஏற்படும் என்று பார்முலா -இ அமைப்பு நம்புகிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!