வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (30/11/2017)

கடைசி தொடர்பு:15:42 (30/11/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன்... ஆட்சி மன்றக் குழுவில் ஒருமனதாகத் தேர்வு!

அ.தி.மு.க-வின் ஆட்சி மன்றக் குழு இன்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 27 விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, எடுத்த ஒருமனதான முடிவின்படி கழக அவைத் தலைவர் மதுசூதனன் அ.தி.மு.க சார்பில் அடுத்த மாதம் 21-ம் தேதி நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுசூதனன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி, கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க-விலிருந்து மதுசூதனன் போட்டியிடுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்சி  மன்றக் குழு அறிக்கை