ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம், 21-ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி, தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. வாக்குப்பதிவுக்குத் தேவையான இயந்திரங்கள் இன்று சென்னை வந்துள்ள நிலையில், அவை சோதனை செய்யும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, தேர்தல்குறித்து புகார் ஏதும் இருப்பின் அதுகுறித்து தெரிவிக்க எண்களை அறிவித்துள்ளது தேர்தல் கமிஷன்.

ராஜேஷ் லக்கானி

தேர்தல்குறித்து புகார் தெரிவிக்க ஏதுவாக, சுழற்சி மூலம் 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம், புகார் பிரிவு ஒன்று சென்னை மாநகராட்சித் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், 3 உதவி செயற்பொறியாளர்கள், 3 உதவி பொறியாளர்கள், 3 கண்காணிப்பாளர்கள், 24 உதவியாளர்கள் கொண்டவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புகார் தெரிவிப்பதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் - 1913 ஆகும். கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள 1800-425 7012 என்ற எண்ணை டயல் செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்க 755022 5820 என்ற எண் மூலமும் 755022 5821 என்ற எண் மூலமும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!